போக்குவரத்து துறை

விவசாயம்
November 23, 2015
தொழிற்துறை
December 14, 2017

போக்குவரத்து துறை

தமிழகத்தின் சமூகப் பொருளாதார தொழில் வளர்ச்சிகளுக்குத் தேவையான அடித்தளங்களை உருவாக்கிடும் முயற்சிகளில்; சாலை வசதிகளை உருவாக்கி, மேம்படுத்தி தொடர்ந்து பராமரிப்பதில் தனிக் கவனம் செலுத்துவதும் ஒன்றாகுமெனக் கருதி 1-8-1996 அன்று தலைமைச் செயலகத்தில் அதற்கென தனியானதொரு துறை உருவாக்கப்பட்டது. கிராமப்புறங்களை, முக்கிய சாலைகளுடன் இணைக்கும் இணைப்புச் சாலை திட்டத்தை திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிதான் 1976க்கு முன்பே தீட்டி அதில் வேகமான வளர்ச்சி கண்டது என்பதை அனைவரும் அறிவர்! அவ்வழி நின்றுதான் 1998 மார்ச் 26ஆம் நாள் தமிழக வரலாற்றில் முதன் முறையாக நெடுஞ்சாலைத் துறைக்கென தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டது.

பாலங்களும், மேம்பாலங்களும்
கட்டிமுடிக்கப்பட்ட 345 பாலங்களின் விவரங்கள் பின்வருமாறு:

1.மதுரை மாவட்டத்தில் மதுரை அண்ணா நகர் 80 அடி சாலையையும், காமராசர் சாலையையும் இணைத்து வைகை ஆற்றின் குறுக்கே ஒரு பாலம் 7 கோடியே 25 இலட்சம் ரூபாய் செலவில் 30.4.97 அன்று கட்டி முடிக்கப்பட்டது.

2.மதுரா கோட்ஸ் அருகில் புதிய ஜெயில் சாலையில் ஆறு கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் ஒரு மேம்பாலம் 13.11.99 அன்று கட்டிமுடிக்கப்பட்டது.

3.மதுரை வைகை ஆற்றின் குறுக்கே ஏற்கனவே இருந்த கல்பாலம் தாம்போகிக்கு பதிலாக 8 கோடி ரூபாய் செலவில் ஓர் உயர்மட்டப் பாலம் 23.2.2000 அன்று கட்டிமுடிக்கப்பட்டது.

4.மதுரை சுற்றுச்சாலையில் வைகை ஆற்றின் குறுக்கே 4 கோடி ரூபாய் செலவில் ஓர் உயர்மட்டப்பாலம் 25.5.2000 அன்று கட்டிமுடிக்கப்பட்டது.