1.எண்ணெய் வித்துக்கள் உற்பத்தித் திறனில் அரியானா, ஒரிசா ஆகிய இரண்டு மாநிலங்களையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு தமிழ்நாடு முதல் இடத்திற்கு வந்து விட்டது. 1998-99ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிற்கு என்று மூன்று தனிச் சிறப்புகள் சேர்ந்துள்ளன. இந்தியாவிலேயே தமிழ்நாடு அரிசி உற்பத்தித் திறனில் முதல் இடம், கரும்பு உற்பத்தித் திறனில் முதல் இடம், எண்ணெய் வித்துக்கள் உற்பத்தித் திறனில் முதல் இடம் பெற்றுள்ளது.
2.இந்திய மாநிலங்களில் அரிசி உற்பத்தியில் தமிழகத்தின் உற்பத்தித்திறன் ஒரு ஹெக்டருக்கு 3,579 கிலோ எனச் சாதனை புரிந்து முதல் இடத்தில் உள்ளது.
3.உலகத்திலேயே கரும்பு உற்பத்தியில் தமிழகத்தின் உற்பத்தித்திறன் ஒரு ஹெக்டேருக்கு 134.16 மெட்ரிக் டன் எனச் சாதனை செய்து முதல் இடத்தில் இருக்கிறோம். இந்திய மாநிலங்களில் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் தமிழகத்தின் உற்பத்தித்திறன் ஒரு ஹெக்டேருக்கு 1,650 கிலோ எனச் சாதனை புரிந்து அதிலும் முதல் இடத்தில் இருக்கிறோம். (Based on Season & Crop Report 1998-99 of Director of Statistics)
4.மரவள்ளிக் கிழங்கு உற்பத்தித் திறனில் தமிழகம் உலகில் முதலிடம்.

