புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை M.ஜெகன்மூர்த்தி அவர்கள் தமிழக மக்களுக்கு தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் .அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் : தமிழர்களின் பண்பாட்டை பறைசாற்றும் உழவர்களின் அறுவடைத் திருநாளாம் பொங்கல் திருநாளில் கால்நடைகளுக்கும் தமது நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் நாளாகும். தமிழக மக்கள் வாழ்வில் நலமும், வளமும், பெருகி, அமைதியும் இன்பமும் நிலைக்கட்டும் .தமிழ் மக்கள் அனைவருக்கும் என் உளம் நிறைந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை புரட்சி பாரதம் கட்சியின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.