வரலாறு
- டாக்டர் பூவை மு.மூர்த்தியார் வரலாறு
- டாக்டர் பூவை மு.மூர்த்தியார் பொன்மொழிகள்
- டாக்டர் பூவை மு.மூர்த்தியார் படத்தொகுப்பு
- டாக்டர் பூவை மு.மூர்த்தியார் காணொலிகள்
பூவை மு.மூர்த்தியார் வரலாறு
பிறப்பு: ஏப்ரல் 10, 1953இடம்: ஆண்டரசன்பேட்டை, பூவிருந்தவல்லி வட்டம், தமிழ்நாடு மாநிலம்.
பணி: வழக்கறிஞர் (சென்னை உயர்நீதி மன்றம்), சென்னை ரிசர்வு வங்கி, நிறுவனர் அம்பேத்கர் மக்கள் விடுதலை முன்னனி (APLF), நிறுவனர் புரட்சி பாரதம் கட்சி.
இறப்பு: செப்டம்பர் 2, 2002
நாட்டுரிமை: இந்தியன்
தாழ்த்தப்பட்ட மக்களின் ஒளிவிளக்காக திகழ்ந்து மறைந்தவர் டாக்டர் பூவை எம் .மூத்தியார்.
பிறப்பு
திருவள்ளுவர் மாவட்டம், பூந்தமல்லி வட்டம், ஆண்டரசன் பேட்டை என்னும் குக்கிராமத்தில் ஏழை விவசாயக் குடும்பத்தில் திரு.முனுசாமி - திருமதி.ருக்மணி அம்மையார் என்பவருக்கு 10/04/1953 ஆம் ஆண்டு மூர்த்தியார் பிறந்தார்.
கல்வி
1958 ஆம் ஆண்டு ஆண்டரசன்பேட்டை அரசு தொடக்கப்பள்ளியில் 1 ஆம் வகுப்பு படித்து, 1963 ஆம் ஆண்டில் ஐந்தாம் வகுப்பு முடித்தார். 1964 ஆம் ஆண்டு திருமழிசையிலுள்ள திரு சுந்தரமுதலியார் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்து 6 ஆம் வகுப்பை தொடர்ந்தார். 1970 ஆம் ஆண்டு பள்ளி இறுதி வகுப்பில் வெற்றி பெற்று பட்டாபிராமில் உள்ள இந்துக் கல்லூரியில் PUC படிப்பை தொடர்ந்தார். 1970 ஆம் ஆண்டு கல்லூரி மாணவத் தலைவராக நின்று வெற்றி பெற்று கல்லூரி மாணவர்கள் மத்தியில் படிப்பில் சிறந்தவராகவும் பேச்சில் சொல்வன்மை மிக்க புரட்சியை தட்டி எழுப்பும் பேச்சாளராகவும் விளங்கினார். 1971ல் ஆம் ஆண்டு PUC முடித்தார்.
சிறுவயத்திலே தாய் மொழியும் சமூகம் ஆகியவற்றின் மீது ஆளவிலாபற்றும் கொண்டவர். 1971 ஆம் ஆண்டு சென்னை மாநிலக் கல்லூரியில் B .A Economics படித்தார். குடும்ப வறுமை காரணமாக புரசைவாக்கம் அரசு விடுதியில் தங்கி அங்கு இருந்தே மாநில கல்லூரிக்கு நடந்து சென்றே படித்தார்.
சென்னை மாநிலக் கல்லூரியில் மாணவத்தலைவர் தேர்தலில் நின்று வெற்றி வாகை சூட்டினர். 1973 ஆம் ஆண்டு கல்லூரியிலே இரண்டாவது மாணவராக வெற்றி பெற்றதன் காரணமாக சென்னை பல்கலைகழத்தின் மூலமாக தகுதி அடிப்படையில் 1974 ஆம் ஆண்டு தஞ்சாவூர் பூண்டி புஷ்பம் கல்லூரியில் சேர்ந்து MA Economics படிப்பை 1975 ஆம் ஆண்டு முடித்தார்.
1978 ஆம் ஆண்டு சென்னை சட்டக் கல்லூரியில் பயின்று சட்டப் படிப்பை முடித்தார்.
தத்துவ படிப்பான Ph .D பட்டமும் பெற்று திகழந்தார்.படிக்கும் பருவத்திலேயே டாக்டர் அம்பேத்கார் மீது அளவற்ற பக்தி கொண்டு இருந்தார். வழக்கறிஞர் படிப்பு முடித்தவுடன் பூந்தமல்லி கோர்ட்டிலும் சென்னை உயர்நிதிமன்றத்திலும் வழக்கறிஞராக தொழில் செய்து வந்துள்ளார். சென்னை ரிசர்வ் வங்கியில் உயர் பதவியில் வேலை கிடைத்தது.அந்த வேலையையும் செவ்வனே செய்து வந்தார்.
அம்பேத்கார் மன்றம் உறுவாக்கம்
அம்பேத்காரின் சமூக பணிகள் அவரை மிகவும் கவர்ந்தன. படிக்கும் நேரத்தில் "அம்பேத்கார்" என்ற பெயரில் பூந்தமல்லி பகுதியில் மன்றம் ஆரம்பித்து ஏழை எளிய மக்களுக்கு பல நம்மைகளை செய்து வந்தார்.நாளுக்கு நாள் அம்பேத்காரின் சாதனைகளை பட்டிதொட்டி எல்லாம் சொல்லி வந்தார். இதனால் கிராமங்களில் அம்பேத்காரின் புகழ் பரவியது.ஒடுக்கப்பட்ட இனமக்களின் உரிமைகளை பாதுகாத்திடவும், ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்திடவும், "டாக்டர் அம்பேத்கர் மன்றம்" 1978 ஜனவரி 26-ல் பூவையில் டாக்டர்.பூவை.M. மூர்த்தியார் அவர்களால் துவங்கபட்டது. டாக்டர் அம்பேத்கர் மன்றத்தின் வரலாறு என்பது முதலில் சென்னையில் உள்ள ஒடுக்கபட்ட மக்களிடையே பகுத்தறிவு உண்டாக்கவும், அவர்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்கவும் உருவாக்கபட்ட ஒரு மன்றமாகும்.
தென் தமிழ் ஒடுக்கப்பட்ட மக்களின் அடிமைத்தனத்தை அகற்றி சமுதாயம், பொருளாதாரம், அரசியல் துறைகளில் அவர்கள் அதிக இடம் பெறவும், அரசு பதவிகளிலும் இயக்கங்களிலும் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை எதிர்க்கவும், பிராமணர் அல்லாதாரின்சமூக, பொருளாதார, அரசியல் நலன்களைப் பாதுகாப்பதே டாக்டர் அம்பேத்கர் மன்றத்தின் நோக்கம்.
மன்றம் தொடங்கிய சில மாதங்களில் அசுர வளர்ச்சி பெற்று சிரு இயக்கமாக இருந்தாலும் பல ஒடுக்கப்பட்ட மக்களின் ஆதரவுடன் "பூவை ஒன்றிய டாக்டர் அம்பேத்கர் மன்றம்" என்று பெயர் மாற்றபட்டது. சென்னை பூவிருந்தவல்லி மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் பல ஒடுக்கப்பட்ட மக்களின் படிபுக்காகவும், வேலை வாய்ப்புக்காகவும், பிறந்த மண்ணின் சொந்தக்காரர் என்ற உரிமையுடன் வாழ உறுதுனையாய் நின்றது. பல ஒடுக்கப்பட்ட மக்களின் ஆதரவு பெருகவும் மற்றும் திருவள்ளுர் மற்றும் காஞ்சீபுரம் மாவட்டங்களில் ஆதரவு பெருகவே "செங்கை மாவட்ட டாக்டர் அம்பேத்கர் மன்றம்" என்று பெயர் மாற்றபட்டது.
சிறு சிறு குழுக்களாக இயங்கபட்ட இயக்கம் பிறகு, பல போராட்டங்கள் நடத்தி, பல ஆதிக்க சமூகங்களின் எதிர்புகளை மீரி கர்பி, ஒன்று சேர், புரட்சி செய் என்ற கோட்பாடுகளோடு, சுதந்திரம், சமத்துவம், சகோதர்துவம் என்ற கொள்கைக்ளோடு அனைவருக்கும் பொதுவாக "டாக்டர் அம்பேத்கர் மக்கள் விடுதலை முன்னனி (APLF)"அக உருவெடுத்தது. 14.4.1984 ஆம் அண்டு டாக்டர் அம்பேத்கர் மக்கள் விடுதலை முன்னணி (APLF ) என்ற மாபெரும் இயக்கத்தை ஏற்படுத்தி மாநிலத்தலைவராக பொறுப்பு ஏற்று சட்டரீதியாக சமாதனத்தை எங்கெல்லாம் நிலா நாட்ட முடியுமோ அங்கெல்லாம் சமாதானமாக போக தம் தொண்டர்களுக்கு கட்டளையிட்டார்.
சட்ட விரோதமாக தம் சமுதய்ததுக்கு எங்கெல்லாம் கொடுமைகள் நடக்கிறதோ அங்கு எல்லாம் மக்களுக்கு ராணவ பலமாக அரணாக இருந்தார்.
1991 ஆம் ஆண்டு பூந்தமல்லியில் பூவையார் தலைமையில் அன்றையே மத்திய அமைச்சர் திரு அர்ஜுன் சிங் அவர்களால் புரட்சியாளர் அம்பேத்கர் சிலை திறக்கப்பட்டது.
அமெரிக்க கலிபோர்னிய பல்கலைகழகம் பூவையாரின் சமுக சேவைகளைப் பாராட்டி டாக்டர் பட்டம் வழங்கியது. 29/9/1998 டாக்டர் அம்பேத்கர் மக்கள் விடுதலை முன்னணி யை "புரட்சி பாரதம் கட்சி" என்ற அரசியல் இயக்கமாக மாற்றினர்.
அம்பேத்கார் மக்கள் விடுதலை முன்னணி பணிக்க நாளுக்கு நாள் வேகமாக தொடர்ந்து வந்தன. இதனால் வாங்கி பணியை கவனிக்க இயலவில்லை. மக்கள் பணி தான் முக்கியம் என கருதி வங்கி பணியை ராஜினாமா செய்தார். முழு நேர அரசியலில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டார்.
இதனால் திருமண வாழ்க்கையை வெறுத்தார். சாகும் வரை பிரம்மசாரியாகவே இருந்தார். தாழ்த்த பட்ட மக்கள் கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்ததை கண்டு இம்மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பெரிதும் உதவினார்.
குறிப்பாக பட்டம் பெற்ற பல மாணவர்களை சட்ட கல்லூரியில் சேர்த்து சட்டம் பயில்வதற்கு உதவி செய்தார்.இதனால் எண்ணற்ற தாழ்த்தப்பட்ட மாணவர்கள் வக்கீலாக படித்து வக்கீல் தொழில் செய்து வருகின்றனர்.வக்கீலாக முன்னேரிய தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள்.தாழ்த்தப்பட்ட இன மக்களுக்கு சட்ட உதவிகள் இலவசமாக செய்து தர வேண்டுமென்று கட்டளையிட்டார் இதனால் தாழ்த்தப்பட்ட மக்கள் சட்ட பிரச்சனைகளில் ஈடுபட்ட போதும் குற்ற வழக்கில் சம்மந்தப்பட்ட போதும் வக்கீல்களின் துணையோடு இலவச சட்ட உதவிபெற்றனர்.எதனால் டாக்டர் பூவை எம்.மூர்த்தியின் புகழ் மேலும் பரவியது.
தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பிளஸ்டூ படித்து முடித்தவுடனும் பட்ட படிப்பு முடிந்தவுடனும் என்ன மேல் படிப்பில் சேர வேண்டுமென்ற தெளிவு இல்லாதபோது அம்மாணவர்களின் கல்வி மேல்படிப்புக்கும்,கல்லூரியில் சேர்வதற்கும் உதவிகளும் ஆலோசனைகளும் வழங்கினார் இதனால் பல மாணவர்கள் டாக்டர்களாகவும் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் படித்து முன்னேரி உள்ளனர்.
வேலைவாய்ப்புக்கு உதவிகள்தாழ்த்தப்பட்ட மக்களின் பிள்ளைகள் படித்து விட்டு வேலை ஏதும் இல்லை என்று கேள்விப்பட்டால் உடனே அவர்களுக்கு வேலை வாய்ப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை சுட்டிக்காட்டி வேலைவாய்ப்புக்கான தேர்வுகளை எழுதச்சொல்லி அதன் மூலம் பலருக்கு வங்கிகள்,மத்திய அரசின் அலுவலகங்கள்,மாநில அரசின் அலுவலகங்கள் ஆகியவற்றில் வேலையில் சேர்வதற்கு உதவிசெய்துள்ளார்.இதனால் தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி பணியிலும்,அரசு பணியிலும் மாபெரும்மாற்றத்தை உருவாக்கினார்.இதனால் தாழ்த்தப்பட்ட படித்த இளைஞர்களின் பட்டாளம் டாக்டர் பூவை எம்.மூர்த்தியின் பக்கம் இருந்தனர்.
வீட்டுமனை பெற உதவிகள்பல்லாயிரக்கணக்கான தாழ்த்தப்பட்ட ஒதுக்கப்பட்ட மக்கள் வீட்டுமனைகள் இல்லாமல் இருந்தனர்.வீட்டுமனையுள்ளவர்களுக்கு வீடுகள் இல்லாமல் இருந்தனர்.எதனை அறிந்த பூவை எம்.மூர்த்தி அரசின் முழு ஒத்துழைப்புடன் வீட்டுமனை இல்லாத தாழ்த்தப்பட்ட ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனை,வீடுகள் கட்டி கொடுப்பதற்கு கடன் உதவியும் செய்துகொடுத்தார்.இதனால் பல்லாயிரக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்களின் அன்பையும்,ஆதரவையும் பெற்றார். தொழிலாளர்கள் முன்னேற்றம்
தாழ்த்தப்பட்ட மற்றும் ஒதுக்கப்பட்ட,பிற்படுத்தப்பட்ட மக்கள் பணிபுரியும் தொழிற்சாலையில் தொழிலார்களுக்கு சம்பளம் பணி வரன்முறை போன்ற பிரச்சனைகள் ஏற்பட்ட பொது தொழிற்சாலை நிறுவனத்துடன் தொடர்புகொண்டு பேச்சுவார்த்தை நடத்தி சில தொழில்சாலையில் போராட்டங்கள் நடத்தியும் வெற்றிக்கண்டு தொழிலாளர்களின் வாழ்க்கை தரம் உயர்த்துவதற்குடாக்டர் பூவை எம்.மூர்த்தி அரும்பாடுபட்டார்.இதனால் தொழிலாளர்களின் குடும்பங்கள் மிகுந்த பற்றும் பாசமும் இவர்களின் மீது கொண்டனர். கூலி தொழிலாளர்களுக்கான மூட்டை சுமப்போர்,பூவிற்போர் சாலையின் ஓரங்களில் கடை நடத்துவோர் என அனைத்து தர மக்களின் பிரச்சனைகளுக்கு பாடுபட்டு அவர்களின் முன்னேற்றத்திற்கு அரும்பாடுப்பேற்றர். நல்வழித்திட்டம்
தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் தங்கள் நேரத்தையும்,மனதையும் சரியான வழிகளில் பயன்படுத்த நலவழித்திட்டம் என்பதை செயல்படுத்தி மாணவர்கள்,தொழிலாளர்கள்,வேலையற்ற இளைஞர்கள் வாழ்க்கை தரம் உயரவும்,நலவையில் தங்கள் வாழ்க்கையை அமைத்து கொள்ளவும் அங்கேயே பாசறை போன்ற கருத்தரங்கு அமைத்து மக்களின் தரம் உயர்வதற்கு வழிவகை செய்தார். சுகாதாரம்
மக்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான் நீண்டகாலம் வாழமுடியும் என்ற அடிப்படையில் மக்கள் சுகாதாரமாவும் சுத்தமாகவும் வாழ்வதற்கு சிறு சிறு கருத்தரங்குகள் நடத்தி மக்களின் சுகாதார வாழ்க்கைக்கு ஆலோசனை வழங்கினார் . கட்சி பணிகள்
அம்பேத்கார் மன்றம் என்று இருந்ததை நாளடைவில் அம்பேத்கார் மக்கள் விடுதலை முன்னணி என்று பெயர் மாற்றம் செய்து கட்சி பணியாற்றி வந்தார் நாளடைவில் அரசியல் பெரிய மாற்றங்கள் ஏற்பட்ட போது அம்பேத்கார் விடுதலை முன்னணியை புரட்சி பாரதம் கட்சி என்று பெயர் மாற்றம் செய்து இந்த கட்சி ஒரு அரசியல் கட்சியாக இன்று செயல்படுகிறது புரட்சி பாரதம் கட்சியின் நிறுவனராகவும் மாநில தலைவராகவும் டாக்டர் பூவை எம் மூர்த்தி இருந்தார். புரட்சி பாரதம் கட்சியின் தலைமை அலுவலகம் பூந்தமல்லியில் செயல்பட்டு வருகிறது.
எந்த ஒரு அரசியல் கட்சியும் நிதியின்றி நடத்த முடியாது ஆனால் புரட்சி பாரதம் கட்சி எந்தவித நிதி ஆதாரமும் இல்லாமல் நடத்தப்பட்டு வருகிறது இதனால் கட்சியை வலு உள்ளதாகவும் பலப்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது எதிர்காலங்களில் இக்கட்சியை ஒரு மாபெரும் அரசியல் கட்சியாகவும் இக்கட்சிக்கு வேண்டிய நிதி ஆதாரத்தை உருவாக்கவும் மாபெரும் திட்டம் உருவாக்கினார் .
டாக்டர் பூவை எம் மூர்த்தி தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கை கல்வித்தரம் சுகாதாரம், வேலைவாய்ப்பு இவைகளில் முன்னேற இரவு,பகலாக பாடுபட்டு வந்தார். இவரை அனைவருமே அண்ணன் என்று அன்போடு அழைப்பார்கள்.
டாக்டர் பூவை எம் மூர்த்தியின் பணிகள் அடிச்சுவடுகளை பின்பற்றி வருவதால் அவரை தென்னிந்தியாவின் அம்பேத்கார் என்று புரட்சி பாரதம் கட்சியினர் அன்போடு அழைத்தனர்.
சமுதாய போராட்டங்கள்1978ல் டாக்டர் அம்பேத்கர் மன்றத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் பூவை மூர்த்தியார் அவர்களால், பூவிருந்தவல்லியில் அண்ணலின் சிலை அமைக்க குழு ஒன்று நிறுவப்பட்டது. இந்தக் குழுவில் ஜெகன்நாதன் EX.MP, வை.பாலசுந்தரம்,திரு.சக்திதாசன் ராவணன் போன்றவர்கள் அங்கம் வகித்தனர்.
அதே ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் S. முருகையனை சாதியவாதிகள் படுகொலை செய்ததைக் கண்டித்து கட்சி பேதமின்றி அம்பேத்கர் மன்றம் சார்பாக பூவிருந்தவல்லியில் இருந்து கண்டனப் பேரணியும் குமனன்சாவயில் கண்டன பொதுக்கூட்டம் நடத்தினார், டாக்டர் மூர்த்தியார்.
1978ல் விழுப்புரம் பெரிய காலனியில் மிகப்பெரிய சாதி கலவரம் ஏற்பட்டது இதில் நம் சமுதாய மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டதைக் கண்டித்து நமது மன்றம் சார்பாக மூர்த்தியார் அவர்கள் மிகப்பெரிய பேரணியை நடத்தி இறுதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க குரல் கொடுத்தார்.
1979 ஆம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் மன்றம் சார்பில் டாக்டர் பூவை மூர்த்தியார் தலைமையில் பூவிருந்தவல்லி சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள விவசாய கூலி தொழிலாளர்களுக்கு ஒரு படி நெல் அதிகப்படுத்தி கூலி உயர்வை பெற்றுக்கொடுத்தார்.
1980 ஆம் ஆண்டுவரையிலும் போராட்டக் களத்தில் மட்டுமே பங்கேற்ற தலைவர் மூர்த்தியார் அவர்கள் தனது மக்களின் நலன் கருதி ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தேர்தலில் மீன் சின்னத்தில் போட்டியிட்டு கணிசமான வாக்குகள் பெற்றார். அதே வருடம் 1980 - ஆம் ஆண்டு பூவிருந்தவல்லி சட்டமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு சுமார் 10,000 வாக்குகள் பெற்றார் தலைவர் மூர்த்தியார்.
1983ல் பெரியபாளையம் அருகில் உள்ள பூரிவாக்கம் என்ற கிராமத்தில் அம்மன் கோவில் ஒன்றில் இருந்த சாதியப் பாகுபாட்டை தலைவர் மூர்த்தியார் அவர்கள் நேரில் சென்று நொடிப்பொழுதில் முடிவுக்கு கொண்டு வந்தார்.
1984ல் நமது நிறுவனர் பூவை மூர்த்தியார் அவர்கள் பூவிருந்தவல்லியில் அகில இந்திய எஸ்சி எஸ்டி கமிஷன் சேர்மனாக நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி மரகதம் சந்திரசேகர் நியமிக்கப்பட்டதற்கு பாராட்டு விழா நடத்தினார் விழாவில் 4 IAS அதிகாரிகள் கலந்துகொண்டது குறிப்பிடதக்கது.
1986ல் அண்ணலின் பிறந்தநாளை முன்னிட்டு தலைவர் மூர்த்தியார் தலைமையில் சமூக தலைவவர்கள் ஐம்பெரும் தலைவர்களை ஒன்றிணைத்து பேரணி நடத்தினர் இதில் டாக்டர் சேப்பன் வைபா சக்திதாசன் சுந்தர்ராஜன் இளையபெருமாள் போன்ற மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.
1988ல் நமது நிறுவனத் தலைவர் கடும் மக்கள் பணிகளுக்கு இடையே தனது சட்டபடிப்பை முடித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்தார்.
1990ம் ஆண்டு பூவை மூர்த்தியார் அவர்கள் வெள்ளியூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி சீர்கேட்டை கண்டித்து உண்ணாவிரதம் இருந்தார். 1990ல் வெங்கல் நல்லதம்பி நினைவாக அவர்கள் ஊரட்சியில் நெடுங்காள பிரச்சினைகளை தீர்க்க கோரி பல்வேறு வகையான போராட்டங்கள் நடைபெற நமது பூவை மூர்த்தியார் காரணமாகவும் தீர்வை வழங்கவும் செய்தார். 1990ல் ஆரம்ப முதலே சென்னையில் அம்பேத்கர் மணி மண்டபம் கட்ட அரசை தலைவர் மூர்த்தியார் தொடர்ந்து வலியுறுத்தினார்.
1991ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பூவை மூர்த்தியார் அவர்கள் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் ஏணி சின்னத்தில் போட்டியிட்டார் இந்த தேர்தலில் பாமக நமக்கு முழு ஆதரவை தெரிவித்து தலைவரோடு இணைந்து பணியாற்றியது.
1992ல் திருவள்ளுர் மாவட்டத்தின் மக்களின் அடிப்படை வசதிகளை நிரைவேற்றகோரி ஒருநாள் உணவிரத போராட்டம் நடைபெற்றது. 1993ம் ஆண்டு திருவள்ளூர் நகரத்தில் APLF சார்பில் நிறுவனர் மூர்த்தியார் தலைமையில் டாக்டர் அம்பேத்கர் முழு உருவ சிலை திறப்பு விழா நடைபெற்றது இதில் IAS,DSP,EX MP என பலரும் பங்கேற்றனர்.
1994ம் ஆம் ஆண்டில் நடைபெற்ற கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் இனியும் அரசு மணி மண்டபம் கட்ட தாமதித்தால் நாமே அம்பேத்கருக்கு மணிமண்டபம் கட்டுவோம் நாம் ஒவ்வொருவரும் ஒரு செங்கல்களை கொண்டு வாருங்கள் என்று தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தார். இதை கேள்வியுற்ற தமிழக அரசு உடனே அம்பேத்கர் மணி மண்டபம் கட்ட அரசாணை வெளியிட்டது மட்டுமல்லாமல் உடனடியாக அமைத்தது இதற்கு நம்முடைய தலைவர் அவர்களே காரணமாக திகழ்ந்தார்.
1994ல் செங்கை மாவட்டம் காரணை கிராமத்தில் பஞ்சமி நிலம் கோரி போராடிய மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு ஜான் தாமஸ் ,ஏழுமலை இருவர் உயிர் இழந்ததை கண்டித்து மூர்த்தியார் மாபெரும் போராட்டத்தையும் வள்ளுவர்கோட்டம் தொட்டு கோட்டை வரை பேரணி நடத்தி அந்த மக்களுக்கான நிலத்தை அவர்களிடமே ஒப்படைக்க வேண்டி முதல்வரிடம் மனு அளித்தார்.
1995ம் ஆண்டு பூந்தமல்லியில் APLF சார்பில் நமது நிறுவன தலைவர் தலைமையில் அண்ணலின் சிலை திறக்கப்பட்டது இதில் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் அர்ஜூன் சிங் கலந்து கொண்டார்.
1995ம் ஆண்டு தி நகர் பனகல் பார்க்கில் APLFன் முதல் மாநில மாநாடு நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக பாமகவின் நிறுவனர் திரு ராமதாஸ் திரைப்பட இயக்குனர் வி சேகரும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மருத்துவர் ராமதாஸ் ஒரு தலித் இளைஞரையே தமிழகத்தின் முதல்வராக ஆக்குவேன் அதற்கு மூர்த்தியார் ஒருவரே தகுதியானவர் என்று உரையாற்றினார்.
1995ம் ஆண்டு ஆம் தேதி ஏற்கனவே பஞ்சமி நில மீட்பு போராட்டத்தில் பங்கேற்று உயிர் நீத்த தியாகிகள் ஜான் தாமஸ், ஏழுமலை ஆகியோரின் நினைவாக மாபெரும் பேரணியை செங்கல்பட்டில் நடத்தி இறுதியில் அவர்களுக்காக நினைவு தூனும் நிறுவி திறந்துவைத்தார் நம் தலைவர் பூவை மூர்த்தியார்.
1995ம் ஆண்டு ல்டாக்டர் அம்பேத்கர் அரசு போக்குவரத்து தொழிற்சங்க பேரவை யின் பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக தலைவர் மூர்த்தியார் கலந்து கொண்டார். தலைவரின் அயராத பணியால் மத்திய மாநில அரசு ,தனியார் துறை sc/st தொழிலாளர்கள் அனைவரும் நமது கட்சியின் தொழிற் சங்கத்தின் கீழ் இயங்கியது குறிப்பிடத்தக்கது.
1996ம் ஆண்டு -ல் செங்கல்பட்டிற்கு உட்பட்ட நந்திவரம் கிராமத்தில் அண்ணலின் சிலை திறந்து சிறப்புரையாற்றினார் இந்திய அளவில் அதிக இடங்களில் அண்ணலின் சிலை திறந்ததில் முதன்மையானவர் நம் மூர்த்தியார்.
1996ம் ஆண்டு தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த அரக்கோணம் மாநாடு நமது இயக்கத்தின் இரண்டாவது மாபெரும் மாநாடு இதில் அப்போதைய முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் சுமார் 12 லட்சம் மக்கள் கலந்துகொண்டதை கண்ட அப்போதைய முதல்வரையே ஆச்சரியபடுத்தியது.
1996ம் ஆண்டு இதே மாநாட்டில் தான் தலைவர் மூர்த்தியாரால் நம் சமுதாய மக்கள் காவல்துறை பணியில் சேர உயர வரம்பில் 3 சென்டிமீட்டர் குறைத்து பெற்றுத்தந்தார்.
1997ம் ஆண்டு அம்பேத்கர் மணி மண்டபம் அமைக்க கோரியும் துணை ஜனாதிபதி கே ஆர் நாராயணனை ஜனாதிபதியாகப் பதவி உயர்த்தக் கோரியும் அதோடு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் சென்னை குரலகம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது.
1997ம் ஆண்டு APLFன் சார்பில் மேலவளவு படுகொலை கண்டித்து சென்னை அயணவரத்தில் இருந்து கோட்டை நோக்கி பிரம்மாண்ட ஊர்வலம் நடைபெற்றது இந்த சம்பவத்தை கண்டித்து மறியலில் ஈடுபட்ட சமூக மக்களை காவல்துறை கைது செய்திருப்பது கண்டித்தும் அவர்களை விடுவிக்க கோரியும் தலைவர் இறுதியாக உரையாற்றினார் இந்த கோரிக்கைகளை ஏற்று முதல்வர் கருணாநிதி தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதான நமது சமுதாய உறவுகளை விடுவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
1998ம் ஆண்டு தி சென்னை பெரியார் திடலில் APLFஐ அரசியல் கட்சியாக அறிவிப்பது குறித்து பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் முடிவில் அரசியல் கட்சியாக உருமாராவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இத்தனை காலமாக இயக்கமாகவே பயணித்தோம் இனி அரசியல் கட்சியாய் உருவாகும் என்று கூறி சீரிய எண்ணத்தோடு APLFஐ புரட்சி பாரதமாக அறிவிப்பு செய்தார் நமது நிறுவனர் மூர்த்தியார்.
1999ம் ஆண்டு தொலைத்தொடர்புத் துறையில் தீண்டாமை கடைபிடிக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொடர் போராட்டம் கண்டார்.
2000ல் ஆண்டில் கட்சியின் சார்பாக வளசரவாக்கத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது அதில் மூர்த்தியார் அவர்கள் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் சாராம்சம் மற்றும் நமக்கு வழங்கப்பட்ட உரிமைகள் குறித்து உரையாற்றினார் இதில் பசுபதி பாண்டியன் சாத்தை பாக்யராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
2000ம் ஆண்டு சென்னை அமைந்தகரை புல்லா ரெட்டி அவென்யூவில் மாநில சிறுபான்மை பிரிவு சார்பாக மாபெரும் பொதுக்கூட்டம் நடந்தது இதற்கு தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார் தலைவர் பூவையார்.
2001ம் ஆண்டு அன்று சென்னை மெரினாவில் புரட்சி பாரதத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது இதில் ஜி கே மூப்பனார் எம்பி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
மரணம்இப்படி பேரோடும் புகழோடும் வாழ்ந்து வந்த பூவை எம். மூர்த்தி திடீரென மாரடைப்பால் காலமானார் அவர் இறந்த செய்தியைக் கேட்ட புரட்சி பாரதம் கட்சியினரும் பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர் .
பல்வேறு ஊர்களில் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் மறைந்த பூவை எம்.மூர்த்தியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள் அவரது உடல் சொந்த ஊரான ஆண்டர்சன்பேட்டையில் அவரது வீட்டு தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது .
பூவை எம். மூர்த்தி மறைந்தும் அவரது புகழ் மறையவில்லை . தற்போது புரட்சிபாரதம் கட்சியில் மாநிலத் தலைவராக மறைந்த பூவை எம். மூர்த்தியின் தம்பி பூவை எம். ஜெகன்மூர்த்தி பூந்தமல்லி ஒன்றியக்கவுன்சிலராகவும் மற்றும் அரக்கோணம் தொகுதி MLAவாகவும் இருந்துள்ளார். அண்ணனின் அரசியல் அனுபவம் மிக உண்டு இதனால் கட்சியை நடத்தி செல்லக்கூடிய ஆற்றல் இவருக்கு உண்டு மேலும் முழு நேர அரசியலுக்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்டு செயல்பட்டு வருகிறார்.
அண்ணன் பூவை எம். மூர்த்தியின் வழியில் புரட்சி பாரதம் கட்சியை செவ்வெனே நடத்தி செல்வார் என்பதில் எள் அளவும் சந்தேகம் இல்லை.
பூவை மு.மூர்த்தியாரின் பொன்மொழிகள்
- " சாதி மோதல்களை தடுக்க எந்த ஒரு அரசியல் இயக்கமும் முன்வராது ஏனெனில் மக்களை வாக்கு வங்கியாக மாற்றுவதே அவர்களின் குறிக்கோள். "
- " அரசியல்வாதிகள் மக்களால் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் சமுதாய வாதிகளும் மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்."
- " நம் மக்கள் தெளிவடையும் காலம் வரை, அரசியல் கட்சிகள் சுயநலத்திற்காக, சாதி மத மோதல்கள் நிகழ வழிவகை செய்வார்கள்."
- " இந்நாட்டு குடிமக்களுக்கு எழுதிய சட்டம் மிகச்சிறந்த அதிகாரப் பகிர்வையும், உரிமையையும், பாதுகாப்பையும் மற்றும் அடிப்படை உரிமைகளையும் வழங்கியுள்ளது."
- " சாதி வெறியும் என் நாட்டில் உள்ள வரை முன்னேற்றப் பாதை என்பது மூடியே இருக்கும்."
- " தற்காலிக மறுமலர்ச்சி தேவையில்லை நிரந்தர மாற்றம் தரும் புரட்சியே தேவை ஏனெனில் புரட்சி மட்டுமே புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். "
- " கல்வி அறிவு பெற்ற சமூகமோ சொத்தை நோக்கி செல்கிறது வி மறுக்கப்பட்ட சமூகமும் அடிமைகளாக வாழ வழி செய்கிறார்கள்."
- " ஆட்சியாளர்கள் லட்சாபதியாக ஆசைப்படக்கூடாது இலட்சியவாதிகளாகவே இருக்க வேண்டும்."
- " ஏன் அடிமைகளாக்க படுகின்றோம் எதற்காக கூட்டம் கூட்டமாக கொல்லப்படுகிறோம் என்று அறியாத எம்மக்கள் இன்றும் அறியாமையில் தான் இருக்கின்றனர்."
- "உன் மீது தொடர்ந்து அராஜகமும் அடக்குமுறையும் திட்டமிட்டு திணிக்கப்படுமே ஆனால் இப்பொழுதே போர் செய்ய வேண்டும்."
- "அரசு அதிகாரிகளின் அதிகார துஷ்பிரயோகமே எம் மக்களை இன்றும் போராட்டக் களத்திற்கு இழுத்து வருகின்றது."
- "எவன் தன் உயிரை மறந்து தன் இனத்திற்காக போராடுகின்றன முன்னேற்றத்தை தடுக்கின்றது சக்தி இந்த உலகில் எவருக்கும் இல்லை."
- "இந்த மண்ணின் மைந்தனாய் உனக்கு எதிரான கொடுமைகளை எதிர்த்துப் போராடு நீ இழப்பதற்கு ஒன்றுமில்லை உன் உயிரைத் தவிர."
- "இந்த மண்ணின் மைந்தனாய் உனக்கு எதிரான கொடுமைகளை எதிர்த்துப் போராடு நீ இழப்பதற்கு ஒன்றுமில்லை உன் உயிரைத் தவிர."
- "தலித் மக்கள் ஒன்றிணைந்து அரசியல் அதிகாரம் பெற்றுவிட்டால், நாளை ஆட்சியில் அமர்வது கடினமென்று நம்மைப் பிரித்தாளும் சூழ்ச்சிகளுக்கு நன்றாகவே தெரியும்."
- "எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் உடம்பில் உயிர் போகுமே ஒழிய எங்கள் உள்ளத்தில் உள்ள உறுதி ஒரு நாளும் ஒழியாது."
- "தொடர்ந்து ஒடுக்கப்பட்டும் உரிமைகள் பறிக்கப்பட்டும் ஒருவன் வஞ்சிக்கப்பட்டால், அவன் புரட்சியாளன் ஆகவே உருவெடுப்பான்."
- "அதிகாரம் தான் ஒடுக்குமுறையின் முதல் ஆயுதமெனில் அதிகாரத்தைக் கைப்பற்றி உன்மீதான ஒடுக்குமுறையை உடைத்தெறி."
- "ஒருவர் மற்ற மதத்தில் இருந்து இந்து மதம் மாறினால் அவன் எந்த சாதி வகுப்பில் சேர்க்கப்படுவார் என்று தெரியாததே மற்ற நாடுகளில் இந்துமதம் பரவாமல் அதற்குக் காரணம். "
- "இந்திய மக்கள் ஏழைகளாக இருப்பதற்கு, 90 சதவீத மக்களை திட்டமிட்டே வறுமையில் தள்ளப்பட்டது தான் காரணம்."
- "என்னதான் அரசியல் அமைப்பு சட்டம் நாட்டை வெளிப்படையாக ஆண்டு கொண்டிருந்தாலும் இன்றளவும் மனுதர்மம் மறைமுகமாக இந்தியாவை இயக்கிக் கொண்டு தான் இருக்கின்றது."
- "நம் விடுதலைக்கான போராட்டத்தை நாம் இன்றே துவங்க வேண்டும் இப்பொழுதே துவங்க வேண்டும் அதற்கான மாற்றத்தை நம் கண்முன்னே காணவேண்டும்."
- "சகோதரனே நீ கோழையாக இருக்கும் வரை தான் உன் மீது திட்டமிட்டு வன்முறை நிகழ்ந்து கொண்டே இருக்கும். அதனை எதிர்த்துப் போர் செய் அதன் மூலம் நிலையான அமைதியை நீ பெறுவாய்."
- "நாளைய உலகம் நமக்காக காத்திருக்கிறது அதனை அடைய மனதிலுள்ள கோழைத்தனத்தை தூக்கி எறி."
- "இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பு பக்தர்களாக இருந்த விடுதலைப் போராளிகள் இன்று அரசியல் கட்சிகளின் கைக்கூலிகளாக மாறிவிட்டனர்."
- "நாம் புரட்சி செய்ய வேண்டும் என்று வார்த்தையாக இல்லாமல் அவற்றை செயல்முறை படுத்த வேண்டும் அதன் மூலமே நாம் நம் உரிமையை நிலைநாட்ட முடியும்."
- "நாம் எம் மண்ணின் மைந்தர்கள் இந்த நிலத்தின் சொந்தக்காரர்கள் நம்மை அப்புறப்படுத்தும் உரிமை இந்த நாட்டில் எவருக்கும் இல்லை."
- "சட்டம் என்பது நெருப்பை போன்றது அதனை பயன்படுத்துபவரை பொருத்தே அதன் பலன் அமைகிறது."
- "அடக்குமுறையும் தீண்டாமையும் எங்கெல்லாம் தலைவிரிக்கிறதோ அங்கெல்லாம் எங்கள் பாதங்கள் பயணிக்கும்."
- "ஓட்டு அரசியலுக்காக ஆளும் கட்சிகள் பெரும்பான்மை சமூகத்தின் மேல் காட்டும் பாராமுகமே இந்நாட்டில் என்றும் தொடர காரணம்."
- "நம்மை அடக்க ஆயிரம் கரங்கள் நீண்டாலும் நம்முடைய நிலைப்பாட்டில் நிலைத்து நின்றால் நீதி தானாகப் பிறக்கும்."
- "நாம் இந்த மண்ணின் மைந்தர்கள் மனுதர்மவாதிகளை எதிர்க்கின்ற சக்தி நம்மைக் காட்டிலும் இங்கு எவருக்கும் இல்லை."
- "காலம் காலமாக எங்கள் மீது திணிக்கப்படும் வன்முறைக்கு வன்முறைதான் தீர்வு என்றால் அதற்கு நாங்களும் தயார்."
பூவை மு.மூர்த்தியார் படத்தொகுப்பு
பூவை மு.மூர்த்தியார் காணொலிகள்