இயக்கத்தைப் பற்றி

புரட்சி பாரதம் கட்சியை பற்றி

ஒடுக்கப்பட்ட மற்றும் தாழ்த்தபட்ட  இனமக்களின் உரிமைகளை பாதுகாத்திடவும், ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்திடவும்,டாக்டர் அம்பேத்கர் மன்றம் 1978 ஜனவரி 26-ல் பூவையில் டாக்டர்.பூவை.M. மூர்த்தியார் அவர்களால்  தொடங்கப்பட்டது .  டாக்டர் அம்பேத்கர் மன்றத்தின் வரலாறு என்பது முதலில் சென்னையில் உள்ள தலித் மக்களிடையே பகுத்தறிவு உண்டாக்கவும், அவர்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்கவும் உருவாக்கபட்ட ஒரு மன்றமாகும்.

தென் தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட மற்றும் தாழ்த்தபட்ட மக்களின் அடிமைத்தனத்தை அகற்றி சமுதாயம், பொருளாதாரம், அரசியல் துறைகளில் அவர்கள் அதிக இடம் பெறவும், அரசு பதவிகளிலும் இயக்கங்களிலும் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை எதிர்க்கவும், பிராமணர் அல்லாதாரின்சமூக, பொருளாதார, அரசியல் நலன்களைப் பாதுகாப்பதே டாக்டர் அம்பேத்கர் மன்றத்தின் நோக்கம்.

மன்றம் தொடங்கிய சில மாதங்களில் அசுர வளர்ச்சி பெற்று சிரு இயக்கமாக இருந்தாலும் பல ஒடுக்கப்பட்ட மற்றும் தாழ்த்தபட்ட மக்களின் ஆதரவுடன் பூவை ஒன்றிய டாக்டர் அம்பேத்கர் மன்றம் என்று பெயர் மாற்றபட்டது. பூவிருந்தவல்லி மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் பல  தாழ்த்தப்பட்ட ஏழை மாணவர்கள் படிப்புக்காகவும் , வேலை வாய்ப்புக்காகவும், பிறந்த மண்ணின் சொந்தக்காரர் என்ற உரிமையுடன் வாழ உறுதுனையாய் நின்றது.

பல ஒடுக்கப்பட்ட மற்றும் தாழ்த்தபட்ட மக்களின் ஆதரவு பெருகவும் மற்றும் திருவள்ளுர் மற்றும் காஞ்சீபுரம் மாவட்டங்களில் ஆதரவு பெருகவே செங்கை மாவட்ட டாக்டர் அம்பேத்கர் மன்றம் என்று பெயர் மாற்றபட்டது.

சிறு சிறு குழுக்களாக இயங்கபட்ட இயக்கம் பிறகு, பல போராட்டங்கள் நடத்தி, பல ஆதிக்க சமூகங்களின் எதிர்புகளை மீரி கற்பி, ஒன்று சேர், புரட்சி செய் என்ற கோட்பாடுகளோடு, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கொள்கைக்ளோடு அனைவருக்கும் பொதுவாக டாக்டர் அம்பேத்கர் மக்கள் விடுதலை முன்னனி (APLF – Ambedkar People Liberation Front) அக உருவெடுத்தது.

பல கட்சியில் மேல் சமூகத்தினரின் ஆதிக்கத்திலும் அவர்களின் தீவிர மனுநீதி கோட்பாடுகளிலும் வெறுப்புற்ற டாக்டர்.பூவை.M.மூர்த்தியார், தலித் மற்றும் தாழ்த்தபட்ட மக்களின் உரிமைகளுக்கு போராட நமக்கும் அரசியல் உரிமையும் பங்கும் வேண்டும் என புரட்சி பாரதம் கட்சி (PBK) 1998ல் துவங்கபட்டது.

டாக்டர் பூவை மு.மூர்த்தியார் MA.ML.Phd மறைவுக்கு பிறகு புரட்சிபாரதம் கட்சியின் தலைவராக டாக்டர் பூவை மு.ஜெகன்மூர்த்தி இருந்து வருகிறார். ஒரு முறை  அரக்கோணம்  தொகுதியிலிருந்து  தமிழக சட்டபேரவை உறுப்பினராக இருந்த அவர் ஏழை எளிய மக்களுக்காகவும், தாழ்தப்பட்ட மக்களுக்காகவும் சாதியை கடந்து அனைத்து தொகுதி மக்களிடமும் நன்மதிப்பை பெற்றவர். கடந்த பல வருடங்களில் நூற்றுக்கணக்கான சமுதாய சீர்கேடுகளையும் சாதி கொடுமைகளையும் எதிர்த்து போராடியவர். அவரது தலைமையின் கீழ் புரட்சிபாரதம் கட்சி உச்சகட்ட வளர்ச்சியைப் பெற்றது. பல ஊராட்சி மன்ற தலைவர்களையும்,நகர மன்ற தலைவர்களையும்,கவுன்சிலர்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள், கூட்டுறவு வங்கி தலைவர், மற்றும் இயக்குனர்களை பெற்ற புரட்சிபாரதம் கட்சி தமிழக அரசியலில் முக்கியப்பங்கு வகித்தது.டாக்டர் பூவை மு.ஜெகன்மூர்த்தி அவர்களின் தலைமை பண்பும், அயராத உழைப்பும் இணைந்து இயக்கத்தின் வளர்ச்சியை உறுதிப்படுத்தியிருக்கிறது.