வரலாறு

1978

கேட்பாரற்று கிடந்த தன் சமூக மக்களின் அறியாமையை அகற்றிடவும், உறிமைகளை மீட்டிடவும் 1978 ஆம் ஆண்டு பூவை மூர்த்தியார் மூர்த்தியார் அவர்களால் டாக்டர் அம்பேத்கர் மன்றம் துவங்கப்பட்டது.

1978

தலித் சமூகத்தை சார்ந்த, கம்யூனிஸ்ட் கட்சியின் நாகபட்டிணம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.S.முருகையன் சாதியவாதிகளால் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து நீதி வேண்டி மாபெரும் போராட்டத்தை பூவை மூர்த்தியார் நடத்தினார்.

1978

விழுப்புரம் பெரிய காலனியில் மிகப்பெரிய சாதி கலவரம் ஏற்பட்டது. இதில் தலித் சமுதாய மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டதைக் கண்டித்து. டாக்டர் அம்பேத்கர் மன்றம் சார்பாக மூர்த்தியார் அவர்கள் மிகப்பெரிய பேரணியை நடத்தி இறுதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க செய்தார்.

1979

டாக்டர் அம்பேத்கர் மன்றம் சார்பில் பூவை மூர்த்தியார் அவர்கள், பூவிருந்தவல்லியை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள விவசாய கூலி தொழிலாளர்களின் கூலி உயர்வுக்காக போராடி, விவசாய நில முதலாளிகளை அழைத்தி பேசி கூலி உயர்வு பெற்றுக்கொடுத்தார். 


1980

அதுவரையிலும் போராட்டக் களத்தில் மட்டுமே பங்கேற்ற தலைவர் மூர்த்தியார் அவர்கள், தனது மக்களின் நலன் கருதி ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தேர்தலில் மீன் சின்னத்தில் போட்டியிட்டு கணிசமான வாக்குகள் பெற்றார்.

1980

எவரிடமும் சமரசமின்றி தன் மக்களின் நலனுக்காக மட்டும் பூவிருந்தவல்லி சட்டமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு சுமார் 10,000 வாக்குகள் பெற்றார் தலைவர் மூர்த்தியார். 


1982

அம்பேத்கர் மன்றத்தின் முதல் செயற்குழு கூட்டம், வெள்ளவேடு பகுதியில் நடந்தது மன்றத்தின் மாவட்ட மாநாடு நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

1983

பெரியபாளையம் அருகில் உள்ள பூரிவாக்கம் என்ற கிராமத்தில் அம்மன் கோவில் இருந்த சாதியப் பாகுபாட்டை தலைவர் மூர்த்தியார் அவர்கள் நேரில் சென்று நொடிப்பொழுதில் முடிவுக்கு கொண்டு வந்து, சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சாதிய ஒடுக்கு முறைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

1984

பூவை மூர்த்தியார் அவர்கள் பூவிருந்தவல்லியில் அகில இந்திய எஸ்சி/எஸ்டி கமிஷன் சேர்மனாக நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி.மரகதம் சந்திரசேகர் நியமிக்கப்பட்டதற்கு, பாராட்டு விழா நடத்தினார் விழாவில் நான்கு மாவட்ட ஆட்சியாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டது குறிப்பிடதக்கது.

1986

டாக்டர் அம்பேத்கர் மன்றத்தின் சார்பாக, பட்டாபிராம் நெமிலிச்சேரியில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் மன்றமானது மக்களின் நலனில் தொடர்ந்து அக்கறை செலுத்துவதால் பூவை ஒன்றிய அம்பேத்கர் மக்கள் விடுதலை முன்னனியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1986

ஏப்ரல் 14 அண்ணலின் பிறந்தநாளை முன்னிட்டு, தலைவர் மூர்த்தியார் தலைமையில், சமூக தலைவவர்களான டாக்டர் சேப்பன்,  வைபா, சக்திதாசன், சுந்தர்ராஜன், இளையபெருமாள் ஆகிய ஐம்பெரும் தலைவர்களை ஒன்றிணைத்து மிகப்பெரிய பேரணி நடத்தினர் .

1987

மக்களுக்காக தீவிரமாக செயல்பட்டுவந்த பூவை ஒன்றிய டாக்டர் அம்பேத்கர் மன்றம் அசூர வளர்ச்சி பெற்று தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் மக்கள் மன்றமாக உறுவெடுத்து, தமிழகம் முழுக்க கிளைகள் கட்டப்பட்டது.

1990

பூவை மூர்த்தியார் அவர்கள் வெள்ளியூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி சீர்கேட்டை கண்டித்து மிகப்பெரிய உண்ணாவிரத போராட்டம் நடத்தி தீர்வு கண்டார்.

சென்னையில் அம்பேத்கர் மணி மண்டபம் கட்ட வேண்டுமென்று, தமிழக அரசை தலைவர் மூர்த்தியார் மேடைகள்தோரும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

1991

நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பூவை மூர்த்தியார் அவர்கள் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் ஏணி சின்னத்தில் போட்டியிட்டார். இந்த தேர்தலில் பாமக தலைவருக்கு முழு ஆதரவை தெரிவித்து தலைவரோடு இணைந்து பணியாற்றியது.

1993

திருவள்ளூர் நகரத்தில் APLF சார்பில் நிறுவனர் மூர்த்தியார் தலைமையில் டாக்டர் அம்பேத்கர் முழு உருவ சிலை திறப்பு விழா நடைபெற்றது. இதில் பல அரசு அதிகாரிகள் என பலரும் பங்கேற்றனர்.

1994

ஆம் ஆண்டில் நடைபெற்ற கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில், இனியும் அரசு மணி மண்டபம் கட்ட தாமதித்தால்,நாமே அம்பேத்கருக்கு மணிமண்டபம் கட்டுவோம் என்று தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தார். இதை கேள்வியுற்ற தமிழக அரசு உடனே அம்பேத்கர் மணி மண்டபம் கட்ட அரசாணை வெளியிட்டது.

1994

செங்கை மாவட்டம் காரணை கிராமத்தில் பஞ்சமி நிலம் கோரி போராடிய மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு ஜான் தாமஸ் ,ஏழுமலை இருவர் உயிர் இழந்ததை கண்டித்து மூர்த்தியார் மாபெரும் போராட்டத்தையும் வள்ளுவர்கோட்டம் தொட்டு கோட்டை வரை பேரணி நடத்தி அந்த மக்களுக்கான நிலத்தை அவர்களிடமே ஒப்படைக்க வேண்டி முதல்வரிடம் மனு அளித்தார்.

1995

பூந்தமல்லியில் APLF சார்பில் நமது நிறுவன தலைவர் தலைமையில் அண்ணலின் சிலை திறக்கப்பட்டது. இதில் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் அர்ஜூன் சிங் கலந்து கொண்டார்.

1995

தி.நகர் பனகல் பார்க்கில் APLFன் முதல் மாநில மாநாடு நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக பாமகவின் நிறுவனர் திரு.ராமதாஸ், திரைப்பட இயக்குனர் வி.சேகரும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மருத்துவர் ராமதாஸ் ஒரு தலித் இளைஞரையே தமிழகத்தின் முதல்வராக ஆக்குவேன் அதற்கு மூர்த்தியார் ஒருவரே தகுதியானவர் என்று உரையாற்றினார்.

1995

முகலிவாக்கம் பகுதியில் அண்ணல் அம்பேத்கரின் சிலை திறப்பு விழா சிறப்பாக நடை பெற்றது. புரட்சியாளர் மூர்த்தியாரது கரங்களால் சிலை திறக்கப்பட்டது.

1995

ஆம் தேதி ஏற்கனவே பஞ்சமி நில மீட்பு போராட்டத்தில் பங்கேற்று உயிர் நீத்த தியாகிகள் ஜான் தாமஸ், ஏழுமலை ஆகியோரின் நினைவாக மாபெரும் பேரணியை செங்கல்பட்டில் நடத்தி இறுதியில் அவர்களுக்காக நினைவு தூனும் நிறுவி திறந்துவைத்தார் நம் தலைவர் பூவை மூர்த்தியார்.

1995

டாக்டர் அம்பேத்கர் அரசு போக்குவரத்து தொழிற்சங்க பேரவை யின் பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக தலைவர் மூர்த்தியார் கலந்து கொண்டார். தலைவரின் அயராத பணியால் மத்திய மாநில அரசு ,தனியார் துறை sc/st தொழிலாளர்கள் அனைவரும் நமது கட்சியின் தொழிற் சங்கத்தின் கீழ் இயங்கியது குறிப்பிடத்தக்கது.

1996

செங்கல்பட்டிற்கு உட்பட்ட நந்திவரம் கிராமத்தில் அண்ணலின் சிலை திறந்து சிறப்புரையாற்றினார். இந்திய அளவில் அதிக இடங்களில் அண்ணலின் சிலை திறந்ததில் முதன்மையானவர் நம் மூர்த்தியார்.

1996

தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த அரக்கோணம் மாநாடு நமது இயக்கத்தின் இரண்டாவது மாபெரும் மாநாடு இதில் அப்போதைய முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் சுமார் 12 லட்சம் மக்கள் கலந்துகொண்டதை கண்ட அப்போதைய முதல்வரையே ஆச்சரியபடுத்தியது.

1996

இதே மாநாட்டில் தான் தலைவர் மூர்த்தியாரால் நம் சமுதாய மக்கள் காவல்துறை பணியில் சேர உயர வரம்பில் 3 சென்டிமீட்டர் குறைத்து பெற்றுத்தந்தார்.

1997

அம்பேத்கர் மணி மண்டபம் அமைக்க கோரியும், துணை ஜனாதிபதி கே ஆர் நாராயணனை ஜனாதிபதியாகப் பதவி உயர்த்தக் கோரியும், அதோடு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் சென்னை குரலகம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது.

1997

ஆம் தேதி APLFன் சார்பில் மேலவளவு படுகொலை கண்டித்து சென்னை அயணவரத்தில் இருந்து கோட்டை நோக்கி பிரம்மாண்ட ஊர்வலம் நடைபெற்றது. இந்த சம்பவத்தை கண்டித்து மறியலில் ஈடுபட்ட சமூக மக்களை காவல்துறை கைது செய்திருப்பது கண்டித்தும் அவர்களை விடுவிக்க கோரியும் தலைவர் இறுதியாக உரையாற்றினார். இந்த கோரிக்கைகளை ஏற்று முதல்வர் கருணாநிதி தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதான நமது சமுதாய உறவுகளை விடுவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1997

ஆம் தேதி APLFன் சார்பில் மேலவளவு படுகொலை கண்டித்து சென்னை அயணவரத்தில் இருந்து கோட்டை நோக்கி நடந்த பிரம்மாண்ட ஊர்வலம் நடைபெற்றது. தலைவர் மூர்த்தியார் இதற்கு தலைமை தாங்கினார்.

1997

இந்த சம்பவத்தை கண்டித்து மறியலில் ஈடுபட்ட சமூக மக்களை காவல்துறை கைது செய்திருப்பது கண்டித்தும் அவர்களை விடுவிக்க கோரியும் தலைவர் இறுதியாக உரையாற்றினார். இந்த கோரிக்கைகளை ஏற்று முதல்வர் கருணாநிதி தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதான நமது சமுதாய உறவுகளை விடுவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1998

சென்னை பெரியார் திடலில் APLFஐ அரசியல் கட்சியாக அறிவிப்பது குறித்து பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் முடிவில் அரசியல் கட்சியாக உருமாராவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இத்தனை காலமாக இயக்கமாகவே பயணித்தோம் இனி அரசியல் கட்சியாய் உருவாகும் என்று கூறி சீரிய எண்ணத்தோடு APLFஐ புரட்சி பாரதமாக அறிவிப்பு செய்தார் நமது நிறுவனர் மூர்த்தியார்.

2000

புரட்சி பாரதம் கட்சியின் சார்பாக வளசரவாக்கத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது அதில் மூர்த்தியார் அவர்கள் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் சாராம்சம் மற்றும் நமக்கு வழங்கப்பட்ட உரிமைகள் குறித்து உரையாற்றினார் இதில் பசுபதி பாண்டியன் சாத்தை பாக்யராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

2000

ஆம் தேதி சென்னை அமைந்தகரை புல்லா ரெட்டி அவென்யூவில் மாநில சிறுபான்மை பிரிவு சார்பாக மாபெரும் பொதுக்கூட்டம் நடந்தது. இதற்கு தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார் தலைவர் பூவையார்.

2000

APLF புரட்சி பாரதம் கட்சி மற்றும் டாக்டர் மூர்த்தியார் அவர்களின் தொடர் அழுத்தத்தாலும் போராட்டத்தாலும், புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் மணிமண்டபம், சென்னை அடையாரில் அமைக்கப்பட்டது. இவ்விழாவில் டாக்டர் மூர்த்தியார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

2001

அன்று சென்னை மெரினாவில் புரட்சி பாரதத்தின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற்றது இதில் ஜி.கே.மூப்பனார் எம்பி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

2002

ஓய்வில்லா உழைப்பினால் திடீரென, மாரடைப்பு காரணமாக நமது நிறுவனத்தலைவர் புரட்சியாளர் மூர்த்தியார் நம்மையெல்லாம் மீளாத் துயரத்தில் ஆழ்த்தி இவ்வுளகை விட்டு சென்றார். தலைவர் இரங்கல் கூட்டத்தில் பல லட்சம் மக்கள் பங்கேற்றனர், தலித் சமூகமே துயரில் ஆழ்ந்தது.

2002

பூவிருந்தவல்லியில் நடந்த கட்சியின் உயர்மட்ட குழுவால் தலைவராக ஜெகன்மூர்த்தியார் ஒருமனதாக தேர்வுசெய்யப்பட்டார்.

2002

தலைவர் அமரர் மூர்த்தியாரின் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு விழா நடைபெற்றது அதில் பல்வேறு கட்சி, சமூக அமைப்புகளின் தலைவர்கள், தொழிலாளர்கள், தொழிலதிபர்கள், என பலரும் கலந்து கொண்டு தலைவரின் சிறப்புகளை மனமுருக பகிர்ந்தனர்.

2002

அக்டோபர் மாதம் 26 ஆம் நாள் அரசு கொண்டு வந்த கட்டாய மதமாற்றத் தடுப்புச் சட்டத்திற்கு எதிராக புரட்சிபாரதம் கட்சியின் சார்பாக தலைவர் ஜெகன் மூர்த்தியாரின் தலைமையில் மாபெரும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது.

2004

நம்முடைய கட்சியின் சார்பாக சென்னை மெமோரியல் ஹால் அருகில் தனியார் துறையில் இட ஒதுக்கீடு கோரி தலைவர் ஜெகன்மூர்த்தியாரின் தலைமையில் ஆர்பாட்டம் நடந்தேரியது.

2005

சுனாமியால் பாதிக்கப்பட்ட சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் மக்களுக்கு புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தியார் அவர்கள் பல லட்சம் மதிப்பிலான பொருட்களை உதவியாக வழங்கினார்.

2005

அன்று தமிழைச் செம்மொழியாக்க பாடுபட்ட திமுக தலைவர் கருணாநிதிக்கு தமிழ் சிற்பி பட்டத்தை புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தியார் வழங்கினார்.

2005

பல கட்சிகளுக்கு முன்மாதிரியாக சென்னை காமராஜர் அரங்கில் முதல் மகளிர் மாநாட்டை தலைவர் ஜெகன் மூர்த்தியார் தலைமையில் வெற்றிகரமாக நடந்தேரியது.

2006

திமுக உடனான நட்புறவின் காரணமாக சட்டமன்ற தேர்தலில் கூட்டணி வைத்து அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினராக மாபெரும் வெற்றி கண்டார் தலைவர் ஜெகன் மூர்த்தியார் அவர்கள்.

2008

மாபெரும் சமூக நீதி பாதுகாப்பு மண்டல மாநாடு காஞ்சிபுரத்தில் மிக பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. இதற்கு சிறப்பு அழைப்பாளராக அன்றைய தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைக்கப்பட்டு தலைவர் முன்னிலையில் விழா நடைபெற்றது.

2008

ஆம் தேதி ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் பிரச்சினையில் நடிகர் ரஜினிகாந்த் இரட்டை வேடம் போடுவதை கண்டித்து கட்சியின் சார்பில் திருவள்ளூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

2008

ஆம் தேதி சென்னை மெமோரியல் அரங்கம் அருகே ஒரிசாவில் கிறிஸ்துவர்கள் மீது நடத்திய தாக்குதலை கண்டித்து புரட்சி பாரதம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

2008

ஆம் தேதி இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டித்து போர் நிறுத்தத்திற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சென்னை மெமோரியல் ஹால் எதிரே தலைவர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.