புரட்சி பாரதம் கட்சியின் மாநில உயர்நிலை குழு கூட்டம்

திருவள்ளூர் : புரட்சி பாரதம் கட்சியின் மாநில உயர்நிலை குழு கூட்டம் தலைவர் பூவை எம்.ஜெகன் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. மாநில நிர்வாகிகள் முகிலன், மாறன், ஐ.ஏழுமலை, ப.காமராஜ், முல்லை கே.பலராமன், டி.ருசேந்திரகுமார், கூடப்பாக்கம் குட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பழஞ்சூர் வின்சென்ட், பூவை சரவணன், என்.மதிவாசன் வரவேற்றனர்.

கூட்டத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பாராளுமன்றத்தில் அவருக்கு திருவுருவ சிலை அமைப்பதோடு, பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். ஏழைகளுக்கு தடையின்றி வங்கிகளில் பணம் கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்சியின் நிறுவனர் பூவை மூர்த்தியாருக்கு வரும் ஏப்ரல் மாதம் வெண்கல திருவுருவ சிலை அமைப்பது என்பன உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், மாநில நிர்வாகிகள் வீரமணி, முருகேசன், தளபதி செல்வம், மணவூர் மகா, கே.எம்.தர், சைமன் பாபு, ஜான்சன் ஆம்ஸ்ட்ராங், வலசை தருமன், வியாசை சிகா, சாம்சன், ஆர்.டி.சகாயம், பிரீஸ் பன்னீர், கோவிந்த், ஏ.பழனி, எஸ்.பி.சி.தனசேகர், பரணிமாரி, கோலடி பாரத, முரளி, மேகநாதன், பிரபாகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், கே.எஸ்.ரகுநாத் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.