கொள்கைகள்

  • தாழ்த்தப்பட்ட அடித்தள-நசுக்கப்பட்ட மக்களின் சமூக-கல்வி-அரசியலில் உரிமையை நிலை நாட்டுதல்.
  • சாதியின் பெயரால் நடக்கும் வன்கொடுமைகளுக்குத் தீர்வு காண்பது.
  • ஏழை-பணக்காரன் என்ற பாகுபாட்டில் நடக்கும் செயல்களை தடுத்தல்.
  • படிக்காதவன்-படித்தவன் என்ற வேறுபாடின்றி வாழ்தல்.
  • விவசாயத் தொழிலாளர்களின் உழைக்கும் திறனை மதித்தல்.
  • ஆண்டான்-அடிமை மனநிலையை போக்குதல்.
  • ஊர்தோறும் இரவுப் பள்ளிகள் நடத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல்.
  • பள்ளி செல்லா சிறுவர்-சிறுமிகளை கண்டறிந்து பள்ளியில் சேர்த்தல்.
  • உயர்கல்வி பயிலும் மாணவ-மாணவிகளுக்கு உரிய உதவிகள் செய்தல்(கல்லூரியில் சேர்த்தல் மற்றும் பண உதவி செய்தல்).
  • மேற்கண்ட கொள்கை நடைமுறைகள் நிறைவேற்ற சம்பந்தப்பட்டவர்களை நேரில் சந்தித்து உரிய நடவடிக்கைகளை மேற்க்கொள்ளுதல்.