வரலாறு
- டாக்டர்.மு.ஜெகன் மூர்த்தியார் வரலாறு
- Dr. மு.ஜெகன் மூர்த்தியாரின் போராட்டங்கள்
- Dr.மு.ஜெகன் மூர்த்தியார் படத்தொகுப்பு
- Dr.மு.ஜெகன் மூர்த்தியார் காணொலிகள்
Dr.பூவை மு.ஜெகன் மூர்த்தியார் வரலாறு
பிறப்பு: மே 10, 1966இடம்: ஆண்டரசன்பேட்டை, பூவிருந்தவல்லி வட்டம், தமிழ்நாடு மாநிலம்.
பணி: தலைவர் புரட்சி பாரதம் கட்சி, இந்தியா
வகித்த பொறுப்புகள்:
1989 - நேமம் வேலான் வங்கி மூத்த இயக்குனர்.
2001 - பூவை ஒன்றிய கவுன்சிலர்.
2006 - அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர்.
2021 - கே.வி.குப்பம் சட்டமன்ற உறுப்பினர்
நாட்டுரிமை: இந்தியன்
ஒடுக்கப்பட்டு மற்றும் நசுக்கப்படும் மக்களின் அரணாக திகழ்ந்து புரட்சிபாரதம் கட்சியை வழி நடத்தும் சமுக நல போராளி டாக்டர் பூவை மு.ஜெகன் மூர்த்தியார் அவர்கள்.
பிறப்பு
திருவள்ளுவர் மாவட்டம், பூந்தமல்லி வட்டம், ஆண்டரசன் பேட்டை என்னும் குக்கிராமத்தில் ஏழை விவசாயக் குடும்பத்தில் திரு.முனுசாமி - திருமதி.ருக்மணி அம்மையார் என்பவருக்கு 10/05/1966 ஆம் ஆண்டு 8வது குழந்தையாக ஜெகன்மூர்த்தியார் பிறந்தார்.
கல்வி
1972 ஆம் ஆண்டு ஆண்டரசன்பேட்டை அரசு தொடக்கப்பள்ளியில் 1 ஆம் வகுப்பு படித்து, அதன்பிறகு திருமழிசையில் அமைந்துள்ள சுந்தர முதலியார் மேல்நிலைப்பள்ளியில் தனது உயர் கல்வியை முடிக்கிறார், பிறகு பூவிருந்தவல்லியில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளியில் தனது கல்வியை தொடர்கிறார்.
அரசியல் ஈர்ப்பு
இவர் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த அதே சமயத்தில் இவரது அண்ணன் மூர்த்தியார் அம்பேத்கர் மன்றம் ஒன்றை நிறுவி மக்கள் பணியாற்றி வருகின்றார். தாய் தந்தையின் அன்பிலும் அண்ணன் மூர்த்தியார் அரவணைப்பிலும் அண்ணலின் நெறி ஊட்டப்பட்டு வருகிறார் ஜெகன் அவர்கள். அந்த காலகட்டத்தில் மக்கள் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட தனது அண்ணனை அதாவது தலைவர் மூர்த்தியாரை அதுவரை அண்ணனாக பார்த்தவர் அவரது மக்கள்தொகையும் தியாக மனப்பான்மையும் பார்த்து தனது தலைவனாக, தனது ஆசானாக ஏற்றுக்கொண்டு தலைவரோடு ஒரு தொண்டனாக பணியாற்றத் துவங்குகிறார்.
1989ஆம் ஆண்டு சிலகாலம் ஜெகன் அவர்கள் நேமம் வேளாண் வங்கி மூத்த இயக்குனராக பணியாற்றுகிறார். இவர்தான் வகித்த பதவிகள் மிகச் சிறப்புடன் செயல்படுகிறார்.
ஒரு தொண்டனாக கட்சிப்பணி
பொதுவாக தலைவர்களின் வாரிசுகள் கட்சிகள் பொறுப்புகள் கேட்பதுண்டு ஆனால் ஜெகன் அவர்களோ தனக்கான பணிகளையே கேட்டுப் பெற்று செயலாற்றி வந்தார். சென்னை மாநகர் முழுக்க திராவிட கட்சிகளின் விளம்பரம் ஆக்கிரமித்த அந்த காலகட்டத்தில் அண்ணலின் பெயரையும், அண்ணனின் பெயரையும் மாநகரின் முக்கிய சுவர்களில் தானே முன்னின்று எழுதிய தருணங்கள் எத்தனையோ தருணங்கள் உண்டு, இப்படி அடிமட்ட தொண்டனாக இரவு பகல் பாராமல் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டியதுமுண்டு, அப்படி மூர்த்தியாரின் ஆணைக்கிணங்க பூவிருந்தவல்லியில் அண்ணல் அம்பேத்கரின் சிலை அமைக்க ஒரு சக தொண்டனாக லாரிகளில் மணல் ஏற்றிச் சென்ற பல தொண்டர்களில் இவரும் ஒருவராக பணியாற்றியது இன்றளவும் மறக்க இயலாது.
இவர் மூர்த்தியாரின் தொண்டன் என்பதை நிரூபிக்கும் வகையில் அண்ணன் மூர்த்தியார் முன்னெடுக்கும் போராட்டங்களில் தன்னிச்சையாக கலந்து கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.
மேலவளவு படுகொலை சம்பவம்
தமிழகத்தையே உலுக்கிய மேலவளவு படுகொலை சம்பவத்தை கண்டித்து அண்ணன் மூர்த்தியார் அறிவித்த போராட்டத்தில், பல ஆயிரம் தொண்டர்கள் சிறைவாசம் கண்டனர் இதில் ஜெகன் அவர்களும் ஒருவர் என்பது அநேகருக்கு தெரியாது. இன்றளவும் இதற்கு சம்பந்தமான வழக்கை நீதிமன்றத்தில் இவர் சந்தித்து வருகிறார் . இது போன்ற பல வழக்குகளை தான் கட்சித் தலைவர் ஆவதற்கு முன்பாகவே பெற்று பல முறை சிறை சென்றுள்ளார்.
கட்சியில் முதல் பதவி
இந்த காலகட்டத்தில் தான் சமூக இயக்கமாக இருந்த அம்பேத்கர் மக்கள் விடுதலை முன்னணி ஒட்டுமொத்த மக்களுக்குமான புரட்சிபாரதம் கட்சியாக உருவெடுத்தது. ஜெகன் அவர்களின் அர்ப்பணிப்பை கண்ட மூர்த்தியார் கட்சியின் தொழிற்சங்க தலைவராக அவரை நியமிக்க ஆசைப்படுகிறார் ஆனால் ஜெகன் அவர்களோ தலைவரின் தொண்டனாகவே இருக்க விரும்பி அதை தட்டிக் கழிக்கிறார், பிறகு பூவையாரின் கட்டாயத்தில் தொழிற்சங்க தலைவர் பதவியை ஏற்றுக் கொள்கின்றார், அந்தப் பதவியிலும் திறம்பட செயல்படுகின்றார்.
முதல் வெற்றி
2001ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் களம் கண்டு மூர்த்தியாரின் பேராதரவோடு மாபெரும் வெற்றி பெற்று, பூவிருந்தவல்லி ஊராட்சி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினராக பதவி ஏற்கிறார் ஜெகன் அவர்கள். சிறப்பாக செயல்பட்டு மக்கள் பணியாற்றி தன்னை சுற்றி உள்ள மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடிக்கிறார் இளம் புரட்சியாளர்.
மூர்த்தியார் மரணம்
இதற்கிடையில் ஓயாத பணிச்சுமையில் தன் உடம்பை சரிவர கவனிக்காத புரட்சியாளர் மூர்த்தியார் அவர்கள் 2002ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இரண்டாம் தேதி மாரடைப்பால் இயற்கை எய்தினார். இப்படி கண்ணீரில் நம்மை தத்தளிக்க விட்டு இயற்கையின் அழைப்பை ஏற்று இனமான தலைவர் மறைய, தாயற்ற பிள்ளைகளாக தலைவர்களாக பல லட்சம் தலித் உறவுகள் ஏங்கி நின்ற சமயத்தில் பலரின் பேராதரவோடு புரட்சி பாரதம் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்கிறார் ஜெகன் அவர்கள். தன் சகோதரனை இழந்த குடும்பம் ஒருபுரம், தன் தலைவனை இழந்து இறந்த தொண்டர்கள் ஒருபுறம், பல லட்சம் உறுப்பினர்களை கட்டிக்காக்கும் கட்சித் தலைமைப் பதவி ஒருபுறம் என பெரும்சுமையோடு தன் பயணத்தைத் தொடங்குகிறார் ஜெகன் அவர்கள்.
ஜெகன்மூர்த்தியாராக உறுமாற்றம்
பதவியேற்றவுடன் தலைவர் மூர்த்தியார் மறைவதற்கு முன் திட்டமிட்டிருந்த சேலம் மாநாட்டை அதே தேதியில் நடத்த வேண்டும் என்று, அந்த மாநாட்டை நடத்த ஏற்பாடு ஏற்பாடு செய்து, அதில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். திரு.ஜெகன் அவர்கள் பேசுகையில், “நான் இந்தப் பதவிக்கு தகுதியானவன் இல்லை, அண்ணன் மூர்த்தியார் இடத்தை என்னால் நிரப்பவும் முடியாது, ஆனால் ஒன்றை மட்டும் உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன், அண்ணன் மூர்த்தியார் எப்படி இந்த மக்களுக்காக இறுதிவரை போராடி உயிர் நீத்தாரோ, அதுபோலவே என்னுடைய மரணமும் இந்த மக்களுக்காகவே இருக்கும்”, என்று ஒற்றை வரியில் ஒட்டுமொத்த மக்கள் மனதில் அன்றுவரை ஜெகன் ஆக இருந்தவர் ஜெகன்மூர்த்தியாராக உருவெடுத்தார்.
முதல் போராட்டம்
அந்நேரம் அரசு கொண்டு வந்த கட்டாய மதமாற்றத் தடுப்புச் சட்டத்திற்கு எதிராக 2002ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26ஆம் தேதியன்று சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே தலைவர் ஜெகன் மூர்த்தியார் தலைமையில் எழுச்சி மிகு போராட்டம் நடைபெற்றது. பல அரசியல் கட்சிகளுக்கு முன்மாதிரியாக தமிழகத்தில் முதலாவதாக இந்த போராட்டத்தை தலைவர் நடத்திக்காட்டினார். இந்த போராட்டத்தின் விளைவாக அப்போது இருந்த அரசு மதமாற்றத் தடுப்புச் சட்டத்தை திரும்பப் பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது. பல ஆயிரம் தொண்டர்களைத் திரட்டி இந்த சட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்து சிறுபான்மை மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.
அண்ணலின் சிலை திறப்பு
தலைவர் மூர்த்தி அதைப்போன்றே அண்ணலின் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்தார் அவரைப் போன்றே அண்ணலின் சிலை தரப்பிலும் ஆர்வம் காட்டினார் அப்படி வட தமிழகத்தில் பரவலாக கிட்டத்தட்ட 15 க்கும் மேற்பட்ட அண்ணலின் சிலைகளை இதுவரை தெரிந்து வைத்திருக்கின்றார்.
மக்கள் பணி
ஏழை மக்களின் அவல நிலை போக்கவே இலவச மின்சாரம் வழங்க கோரி அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் கண்டார். கூலித் தொழிலாளர்களின் நலன் கருதி அரசு மணல் குவாரிகளில் மணல் அள்ளும் இயந்திரங்கள் பயன்படுத்துவதை தடுக்க கோரி அரசுக்கு அழுத்தம் கொடுத்தார். அதனை தொடர்ந்து அரசு துறைகள் போன்றே தனியார் துறைகளிலும் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி சமூக நீதியை அன்றே வலியுறுத்தினார். பொதுமக்கள் இயற்கை சீற்றங்களால் பாதிப்படையும் போதெல்லாம் தலைவர் ஜெகன் மூர்த்தியார் தன்னாலான உதவிகளை எப்பொழுதும் செய்வது வழக்கம் அப்படி சுனாமி பேரலையால் தன் உடமைகளை இழந்த சென்னை பட்டினப்பாக்கம் மக்களுக்கு பல லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
முதல் அரசியல் கூட்டணி
2004ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கு தனது ஆதரவைத் தெரிவித்து பிரச்சாரம் மேற்கொண்டார் தேர்தல் முடிவில் இந்த கூட்டணி அமோக வெற்றி பெற்றது.
கலைஞருக்கு பட்டம்
தமிழை செம்மொழியாக பாடுபட்ட மேற்காக டாக்டர் கலைஞர் அவர்களுக்கு தமிழ் சிற்பி என்று பட்டம் வழங்கினார் தலைவர் ஜெகன் மூர்த்தியார்.
புரட்சிபாரத மகளிர் மாநாடு
இதுவரை புரட்சி பாரதம் பல சிறப்புமிக்க மாநாடுகளை கண்டிருந்தாலும் 2005ஆம் ஆண்டு முதல் முறையாக நடத்தப்பட்ட மகளிர் மாநாடு மகளிர் மத்தியில் தலைவர் ஜெகன் மூர்த்தியார் என் மதிப்பை மேலும் உயர செய்தது இம்மாநாட்டில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் சிறப்புமிக்க மகளிர் மாநாட்டை நடத்திக் காட்டி பல இயக்கங்களுக்கு முன்னோடியாய் தலைவர் ஜெகன் மூர்த்தியார் விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டமன்ற உறுப்பினர்
பிறகு திமுக உடனான நட்புறவில் கூட்டணி அமைத்து 2006-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் போட்டியிட்டு மாபெரும் வெற்றி கண்டார். இந்த வெற்றி புரட்சி பாரதம் கட்சி கிடைத்த வெற்றியாக பார்க்கப்படாமல் ஒட்டுமொத்த தலித் மக்களுக்கும் கிடைத்த வெற்றியாக அனைவராலும் பார்க்கப்பட்டது. அதுவரையிலும் சட்டமன்றத்தில் ஒரு புரட்சி பாரத உறுப்பினரின் கால் படாத அந்த இயக்கத்தை தலைவரின் வெற்றி பூர்த்தி செய்ததை எண்ணி தொண்டர்கள் கொண்டாடி களித்தனர்.
கல்வி பணி
தலைவரின் எளிமையான அணுகுமுறை அனைவரையும் ஈர்த்தது தலைவர் அனைவருக்கும் மாணவராகவே பார்க்கப்பட்டார்.
தக்கோலம் அரசுப் பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத அருகில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு செல்வது வழக்கம் இதை அறிந்த ஜெகன் மூர்த்தியார் அந்த மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தான் பதவியேற்ற அடுத்த ஆண்டே தக்கோலம் பள்ளி மாணவர்கள் அவர்கள் பள்ளியிலேயே தேர்வு எழுத அரசிடம் பேசி தேர்வு மைய வசதி அமைத்துக் கொடுத்தார்.
தனது தொகுதிக்குட்பட்ட ஐந்துக்கும் மேற்பட்ட உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக மாற்றினார். ஓச்சேரி அருகே உள்ள பெரும்பாக்கம் நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக மாற்றினார். சைனபுரம் என்ற கிராமத்துக்கு உட்பட்ட ஆரம்பப் பள்ளியில் பயிலும் காலனி மாணவர்களுக்கு அதிகமான இடையூறு நேரிடுவதை அறிந்த தலைவர் அடுத்த ஆண்டே அமைச்சரிடம் பேசி காலனி மாணவர்களுக்கு என தனியாக ஒரு ஆரம்பப்பள்ளி அமைத்துக் கொடுத்தார்.
தொகுதி பணி
தனது தொகுதியில் தலைநகரத்தை இணைக்கும் மிக முக்கியமான சோளிங்கர் - திருத்தணி ஆகிய இரண்டு சாலைகளிலும் போக்குவரத்தை மேம்படுத்த இரண்டு மேம்பாலங்கள் இரண்டு மேம்பாலங்கள் அமைய காரணமாயிருந்தார். தனது தொகுதி மக்கள் தங்களுக்கான நீதியை எளிதில் பெற வேண்டி அரக்கோணத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைய காரணமாகவும் இருந்தார் ஜெகன் மூர்த்தியார். அதோடு அரக்கோணம் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் ஏதேனும் ஒரு சிறிய மதிப்பிலான பணியை அது செய்யாது இருக்கவில்லை.
செவாலியே சேவாரத்னா
தலைவரின் சேவை மனப்பான்மையை பாராட்டி மேலை நாடுகளிலிருந்து அளிக்கப்படும் உயரிய விருதான செவாலியர்-சர் என்ற பட்டமும், சேவாரத்னா என்ற பட்டமும் தலைவருக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
ஈழத்தமிழர்களுக்கு போராட்டம்
24-11-2008 ஈழத்தமிழர்கள் மீதான இலங்கை அரசின் தாக்குதலைக் கண்டித்தும் இந்தியா இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் புரட்சிபாரதம் கட்சி சார்பாக பல ஆயிரம் தந்தி அனுப்பும் போராட்டத்தை அறிவித்து நடத்திக் காட்டினார். இத்தனை அட்டூழியங்களை செய்த இலங்கை அதிபர் ராஜபக்சே இந்திய வருகையைக் கண்டித்து, தலைவரின் ஆணைக்கிணங்க திருவள்ளூர் செங்கல்பட்டு காஞ்சிபுரம் வேலூர் போன்ற பகுதிகளில் ரயில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றது இதில் பல புரட்சிபாரதம் கட்சியின் தொண்டர்கள் கைதானது குறிப்பிடத்தக்கது.
இலவச நில பட்டா
தலைவரின் ஆணைக்கிணங்க மாவீரர் மூர்த்தியாரை போன்றே இருக்க இடம் மற்ற ஏழை குடும்பங்களுக்கு இடம் பெற்றுத் தருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் தலைவர் ஜெகன் மூர்த்தியார். பல இடங்களில் தலித் குடியிருப்புகள் அகற்றப்படுவது நேரில் சென்று பார்வையிட்டு அரசு அதிகாரிகளுடன் பேசி இருப்பிடத்தை உறுதி செய்துள்ளார். 05-11-2009 ஆம் தேதி கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏகாட்டூர் அன்னை இந்திரா நகரில் 200 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா தலைவரின் தீவிர முயற்சியால் பெறப்பட்டு வழங்கப்பட்டது.
அன்று அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை வரவேற்பதுடன், தாழ்த்தப்பட்ட பெண்களும் அர்ச்சகர் ஆக வேண்டி ஜெகன்மூர்த்தியாரின் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை உடனடியாக நிறைவேற்றக் கோரி பொன்னேரி அம்பேத்கர் சிலை அருகே கட்சியின் சார்பில் தலைவர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மும்பை தலித் மக்கள்
மும்பை தாராவி பகுதியில் தலைவருக்கு மிகப் பிரம்மாண்டமான பாராட்டு விழா நடைபெற்றது இதில் தலைவர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் இந்த விழாவில் ஆயிரக்கணக்கான தாராவி மக்கள் தங்களை புரட்சிபாரதத்தில் தானாக இணைத்துக் கொண்டனர்.
சமூக நீதி மாநாடு
23-03-2008ல் மாபெரும் சமூக நீதி பாதுகாப்பு மண்டல மாநாடு காஞ்சிபுரத்தில் மிக பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. இதற்கு சிறப்பு அழைப்பாளராக அன்றைய தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் மு க ஸ்டாலின் அழைக்கப்பட்டு தலைவர் முன்னிலையில் நடைபெற்றது.
மக்கள் போராட்டங்கள்
ஆம் தேதி ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் பிரச்சினையில் நடிகர் ரஜினிகாந்த் இரட்டை வேடம் போடுவதை கண்டித்து கட்சியின் சார்பில் திருவள்ளூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 11-09-2008 ஆம் தேதி சென்னை மெமோரியல் அரங்கம் அருகே ஒரிசாவில் கிறிஸ்துவர்கள் மீது நடத்திய தாக்குதலை கண்டித்து புரட்சி பாரதம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தனித்து போட்டி
2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் ஏற்பட்ட தொகுதி முரண்பாட்டில் தலைவர் கூட்டணியை விட்டு வெளியேறி மிகத் துணிச்சலான முடிவை அறிவித்தார் அது என்னவென்றால் வடமாவட்டங்களில் 40க்கும் மேற்பட்ட தொகுதிகளில் புரட்சி பாரதம் கட்சியின் வேட்பாளர்கள் தனித்துப் போட்டியிடுவது தான் எந்த ஒரு இயக்கமும் எண்ணிப் பார்க்காத ஒன்றை துணிச்சலோடு செய்து நடைமுறைப்படுத்திக் காட்டியவர் நம் தலைவர் ஜெகன் மூர்த்தியார் ஒரு தலித் இயக்கம் அதிகமுறை கூட்டணி என்று தேர்தலை சந்தித்தது என்றால் அது நம் புரட்சிபாரதம் மட்டுமே என்பதை எவரும் மறுக்க முடியாது.
தர்மபுரி கலவரம்
2012ஆம் ஆண்டு தர்மபுரியில் நடைபெற்ற கலவரத்தில் நத்தம், கொண்டம்பட்டி, புதியகாலனி, அண்ணாநகர் போன்ற தலித் குடியிருப்புகளில் 200க்கும் மேற்பட்ட குடிசைகள் கொளுத்தப்பட்டது. அதனை அறிந்த தலைவர் ஜெகன் மூர்த்தியார் தடையை மீறி தன் தொண்டர்கள் படைசூழ தர்மபுரிக்குள் நுழைந்தார். அங்கு பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியது அல்லாது அரணாகவும் நின்றவர் நம் தலைவர். தாக்குதலில் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கி அந்த மக்களின் கண்ணீர் துடைத்தார், மற்றும் காவல்துறையினருடன் பெரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அந்த மக்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க செய்தார். அதோடு விடாமல் கலவரத்தில் ஈடுபட்டவர்களை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் சரிப்படுத்த தமிழகம் முழுக்க பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தார்.
அதிமுகவுடன் கூட்டணி
தொடர்ந்து தலித் மக்கள் மீதான சாதி வெறியர்களின் தாக்குதலை கட்டுப்படுத்த முதல்வர் ஜெயலலிதா அம்மையார் அவர்கள் எடுத்த துரிதமான நடவடிக்கைகளை கண்டு, தனது மக்களின் பாதுகாப்பையும் நாலனையும் கருதி 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க முடிவெடுத்து முதல்வர் முதல்வர் ஜெயலலிதா அவர்களை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். தேர்தலில் தமிழகத்தில் அதிமுக தொண்டர்கள் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி இருந்தாலும் புரட்சிபாரதம் வலிமையாக உள்ள திருவள்ளூரில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் தமிழகத்திலேயே அதிகமாக சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு தமிழக அரசின் அரசு விழாக்களிலும் அனைத்து கட்சியின் முக்கிய கூட்டங்களிலும் தலைவருக்கு முக்கியத்துவம் வழங்கியதில் விளைவாக இந்த கூட்டணி 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் நீடித்தது.
2016 மதுராந்தகம் தொகுதி
இத் தேர்தலில் அதிமுகவுடன் ஆனால் தொகுதி பங்கீட்டில் தலைவருக்கு மதுராந்தகம் தொகுதி ஒதுக்கப்பட்டது இருந்தாலும் சில அரசியல் காரணங்களுக்காக அந்த தொகுதியில் போட்டியிட அது தொடர்ந்து ஆதரவு நிலைப்பாட்டில் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அந்த தேர்தலிலும் அதிமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.
பிறகு தமிழக முதல்வர் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் மறைந்து விட்ட பிறகும் புதிதாக பதவியேற்ற முதல் அவர்களுடைய பெரும் மதிப்பைப் பெற்று இருந்தார் தலைவர் ஜெகன் மூர்த்தியார்.
வன்கொடுமை தடுப்பு சட்டம்
தனது மக்களின் பாதுகாப்பு அரணாக விளங்கும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் உச்சநீதிமன்றம் தளர்வு கொண்டுவந்ததை எதிர்த்து, கொதித்தெழுந்த இளம் புரட்சியாளர் சமூக சமுதாய தலைவர்களோடு கரம் கோர்த்து சென்னை சைதாப்பேட்டையில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை 9வது அட்டவணையில் சேர்க்க கோரி சென்னையை ஸ்தம்பிக்கும் வகையில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் கண்டார். இதனை தொடர்ந்து சமுதாய தலைவர்களோடு இணைந்து ஆளுநரை சந்தித்து கோரிக்கை மனுவும் அளித்தார்.
புரட்சிபாரதம் 40ம் ஆண்டு மாநாடு
புரட்சி பாரதம் கட்சியின் 40ஆம் ஆண்டு துவக்க விழாவை சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடத்த முடிவெடுத்தார். கிட்டத்தட்ட அரை நூற்றாண்டை நெருங்கிய ஒரே தலித் இயக்கம் என்பதால் புரட்சி பாரதத்தின் அழைப்பை ஏற்று முதல்வர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். மாநாட்டில் முதல்வர் இடத்திலும் துணை முதல்வர் இடத்திலும் ஒரு கோரிக்கையை வைத்தார் பட்டியலின மாணவர்கள் தடையின்றி கல்வி பயில காரணமாயிருந்த உதவித்தொகை நிறுத்தப்பட்டதை சுட்டிக் காட்டி அதைத் தொடர்ந்து வழங்குவதற்கான அரசாணையை, இந்த மேடையிலேயே அறிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார். சமுதாய மாணவர்களின் நலன் கருதும் ஜெகன் மூர்த்தியார் என் நல்லெண்ணத்தை கண்டு நெகிழ்ந்து போன முதல்வர் தான் பேசுகையில் தலைவரின் கோரிக்கையை இந்த அம்மாவின் அரசு ஏற்றுக் கொள்வதாக மேடையிலேயே அறிவித்தார். இந்த அறிவிப்பைக் கேட்டு புரட்சி பாரத தொண்டர்களும் பொதுமக்களும் அந்த அரங்கமே அதிரும் வண்ணம் ஆரவாரம் செய்து கொண்டாடினர்.
சுயம்பு தலைவர் ஜெகன்மூர்த்தியார்
தலைவர் பூவை மூர்த்தியார் தன்னுடைய மேடைகளில் முகம் தெரியாத பலருக்கு சென்னை மாநகர் அரிய வாய்ப்பு கொடுத்ததன் விளைவாக இன்று பல தலித் தலைவர்களும் உருவாகி இருப்பது நிதர்சனமான உண்மை. ஆனால் தன்னுடைய தம்பியான ஜெகன்மூர்த்தி யாரை ஒருநாளும் மேடையேற்றி அடையாளப்படுத்திய இல்லை சகோதரர்களே. தலைவரின் திடீர் மரணத்தால் ஏற்பட்ட பல்வேறு நெருக்கடிகளால் அவரால் பலனடைந்தவர்கள் அவரால் அடையாளப்படுத்தப்பட்ட அவர்கள் அப்படியே ஓடிவிட அத்தனை சோதனைகளையும் தாண்டி என்று தானாகவே மெருகேற்றப்பட்ட வைரமாக சுயம்பு தலைவராக மக்கள் மனங்களில் ஜொலிக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளில் இளம் புரட்சியாளரின் ஈடில்லா உழைப்பும் உணர்வுபூர்வமான அர்ப்பணிப்புமே காரணம்.
தலித்துகளுக்கு மட்டுமின்றி தமிழர்களின் நலன் கருதியும் குரல்கொடுக்கும் சமத்துவ தலைவர் இவர். தமிழக உறவுகளே காவிரி தொட்டு ஹைட்ரோகார்பன் வரை, மீத்தேன் தொட்டு மணல் கொள்ளை வரை, ஸ்டெர்லைட் தொட்டு ஆணவப்படுகொலை என இவரின் குரல் ஓங்கி ஒலித்தது ஒருபோதும் இந்த ஊடகங்கள் காட்டியதே இல்லை, இப்படி ஊடக பலம் இன்றியும், திட்டமிட்ட இருட்டடிப்பு போலியான விமர்சனங்கள் என அனைத்தையும் கடந்த இவரின் வளர்ச்சியையும் ஆளுமைத் திறனையும் கண்ட அரசியல் ரீதியான பல இயக்கங்கள் அஞ்சுவதை இன்றளவும் காண முடிகிறது என்பதே உன்மை. ஏனென்றால் கல்வி ஒன்றே சமூக மாற்றம் என்ற ஒற்றை கருத்தியலை சமூகத்தில் விதைத்து மக்கள் பணியாற்றி வருகின்றார் ஜெகன் மூர்த்தியார், இவரின் மக்கள் பணி இன்னும் தொடரும்.
Dr. பூவை மு.ஜெகன் மூர்த்தியார் சாதனைகள்
Dr. பூவை மு.ஜெகன் மூர்த்தியார் படத்தொகுப்பு
Dr. பூவை மு.ஜெகன் மூர்த்தியார் காணொலிகள்